வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி


வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 28 April 2021 11:58 PM IST (Updated: 28 April 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

வாலாஜா

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் செல்வநாதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறி சுவிட்சை போடும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி செல்வநாதன் மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story