கண்மாயில் மூழ்கி விவசாயி பலி


கண்மாயில் மூழ்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 28 April 2021 6:38 PM GMT (Updated: 28 April 2021 6:38 PM GMT)

கண்மாயில் மூழ்கி விவசாயி பலியானார்.

சாயல்குடி, 
சாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் குமரேசன் (வயது58). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காவாகுளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அங்கு தண்ணீரில் ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த கீழச்செல்வனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்துஉடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story