நிரம்பி வழியும் கிணறுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நிரம்பிய கிணறுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அருவி, கண்மாய் மற்றும் நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
ேமலும் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆதலால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வழிகின்றன.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் உள்ள கிணறுகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாய பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.
இத்தகைய கோடை வெயிலில் இருந்து சமாளிக்க மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் இந்த கிணறுகளில் குளித்து மகிழ்கின்றனர்.
நிலத்தடி நீர் மட்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையின் காரணமாக எண்ணற்ற கண்மாய்கள் நிரம்பி உள்ளன.
மேலும் தற்போது சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவி மற்றும் நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் நிரம்பி இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் நன்கு அதிகரித்து கிணறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நாங்கள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிேறாம். தற்போது கோடை காலம் என்பதால் இந்த கிணறுகளில் எண்ணற்ற பேர் குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story