நாமக்கல் அருகே லாரி கவிழ்ந்து கிளீனர் படுகாயம்
நாமக்கல் அருகே லாரி கவிழ்ந்து கிளீனர் படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்:
மத்திய பிரதேச மாநிலம் இண்டூரில் இருந்து புதுக்கோட்டைக்கு பாக்கு பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை இண்டூரை சேர்ந்த வாகித் (வயது 45) ஓட்டி வந்தார். இதில் கிளீனராக தாஹீர் (32) உடன் வந்தார்.
இந்த லாரி நேற்று காலை நாமக்கல் அருகே உள்ள குப்பம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் கிளீனர் தாஹீர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் டிரைவர் வாகித் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர். இந்த விபத்து தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story