50 சதவீத ஊழியர்களுடன் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி; கர்நாடக அரசு உத்தரவு


50 சதவீத ஊழியர்களுடன் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி; கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2021 8:58 PM GMT (Updated: 28 April 2021 8:58 PM GMT)

50 சதவீத ஊழியர்களுடன் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட கர்நாடக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட 14 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் உற்பத்தித்துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. 50 சதவீத ஊழியர்களுடன் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

 அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள மாநில அரசு, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை நிறுவனங்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது.

Next Story