மாவட்டத்தில் ஒரே நாளில் 255 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,354 ஆக உயர்வு


மாவட்டத்தில் ஒரே நாளில் 255 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,354 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 April 2021 2:35 AM IST (Updated: 29 April 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,354 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,354 ஆக அதிகரித்து உள்ளது.
255 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 99 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் கோர்ட்டு ஊழியர், அரசு பள்ளி இளநிலை உதவியாளர் உள்பட 255 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,354 ஆக உயர்ந்து உள்ளது.
1,695 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 290 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 541 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 118 பேர் இறந்து விட்ட நிலையில், 1,695 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story