வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அதிகாரிகள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை


வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அதிகாரிகள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 April 2021 1:11 PM GMT (Updated: 29 April 2021 1:11 PM GMT)

வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அதிகாரிகள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்பத்தூர்

தமிழ சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 2-ந் தேதி நடக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி அருகே உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அதன்பேரில் திருப்பத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வெங்கட்ராமன் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் அதிகாரிகள், முகவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக  கட்டிடத்தில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. நேற்று நல்லதம்பி எம்.எல்.ஏ. மற்றும் முகவர்கள், அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை)  தெரிவிக்கப்படும்.

Next Story