9 பேருக்கு கொரோனா அறிகுறி: அண்ணாமலைபட்டி கிராம சாலை அடைப்பு


9 பேருக்கு கொரோனா அறிகுறி: அண்ணாமலைபட்டி கிராம சாலை அடைப்பு
x
தினத்தந்தி 29 April 2021 2:46 PM GMT (Updated: 29 April 2021 2:46 PM GMT)

9 பேருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து அண்ணாமலைபட்டி கிராம சாலை தகரத்தால் அடைக்கப்பட்டது.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ளது அண்ணாமலை பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த பலர் வெளிமாநிலங்களில் துணி வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அரசு, மொரப்பூர் மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, அரூர் தாசில்தார் செல்வகுமார், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கிருஷ்ணன் நவலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு, நவலை ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் அந்த கிராமத்தில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர்.

மேலும் யாருக்கேனும் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா தலைமையில் போலீசார் அந்த பகுதிக்குள் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story