உடுமலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

உடுமலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.
x
தினத்தந்தி 29 April 2021 5:19 PM GMT (Updated: 29 April 2021 5:19 PM GMT)

உடுமலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

உடுமலை
உடுமலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. 
ஆனால் அரசு மருத்துவமனையில் அடிக்கடி கொரோனா தடுப்பூசி மருந்து இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் 100 பேருக்கு கோவிஷீல்டு 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது. அந்த மருந்து இருப்பும் ஒரே நாளில் தீர்ந்தது. இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் அங்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு பகுதியில் உள்ள சுவற்றில், கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 மருந்தும் கையிருப்பில் இல்லை என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதைக்கண்டு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 

Next Story