முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 29 April 2021 5:21 PM GMT (Updated: 29 April 2021 5:21 PM GMT)

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொண்டி, 
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திடீர் ஆய்வு
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா அலுவலர்களுடன் சென்று ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை, தினசரி மார்க்கெட் இடங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது முக கவசம் அணியாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், சிறு கடைகள் என பல்வேறு தரப்பட்ட வர்களுக்கும் அபராதம் விதித்தார்.மேலும் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் நிறுவனங்களை எச்சரித்ததுடன் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அந்தபகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து திருவாடானை யூனியனில் சில ஊராட்சிகளில் கொரோனா 2-வது அலை காரணமாக சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு வீடு சென்றவுடன் சோப்பு போட்டு கை, கால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.
விழிப்புணர்வு
அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story