கட்டிட தொழிலாளி தற்கொலை


தற்கொலை
x
தற்கொலை
தினத்தந்தி 29 April 2021 7:50 PM GMT (Updated: 29 April 2021 7:50 PM GMT)

கட்டிட தொழிலாளி தற்கொலை

கோவை

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சிபு (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர், கோவை பீளமேடு பி.எல்.எஸ். நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். 

அப்போது தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் சிபு கட்டிடத்தின் ஒரு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மறுநாள் காலையில் சிபு பிணமாக தொங்குவதை பார்த்து சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story