வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்


வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2021 8:13 PM GMT (Updated: 29 April 2021 8:13 PM GMT)

கொரோனா பரவுவதை தடுக்க அரசு கூறியுள்ள விதிமுறைகளை வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் கூறினார்.

அருப்புக்கோட்டை, 
கொரோனா பரவுவதை தடுக்க அரசு கூறியுள்ள விதிமுறைகளை வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் கூறினார். 
விழிப்புணர்வு 
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையம் சார்பில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வணிகர்களை  அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
இந்த நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமை தாங்கினார். தாசில்தார் ரவிச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் வசந்தி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, வர்த்தக சங்க பொருளாளர் காசி முருகன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.  
சமூக இடைவெளி 
வணிகர்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 
அரசு கூறியுள்ள விதிமுறைகளை வணிகர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் கூறினார். முடிவில்  வர்த்தக சங்க செயலாளர் பாபு நன்றி கூறினார்.

Next Story