அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி


அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 9:41 PM GMT (Updated: 2 May 2021 9:41 PM GMT)

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

பெரம்பலூர்:

4 தொகுதிகள்
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர்(தனி), குன்னம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கீழப்பழுவூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்திலும், பெரம்பலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பெரம்பலூா் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூாியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்திலும், குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ேவப்பூர் அரசு மகளிர் கல்லூாியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்திலும் நடைபெற்றது.
ஓட்டுகள் விவரம்
இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், குன்னம் ஆகிய 4 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொகுதிகள் வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு;-
அரியலூர் தொகுதி (ம.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 2,64,715
பதிவானவை  - 2,23,800
கு.சின்னப்பா(தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.) - 1,03,975
ராஜேந்திரன்(அ.தி.மு.க.) - 1,00,741
வாக்கு வித்தியாசம் - 3,234
ஜெயங்கொண்டம் தொகுதி(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 2,66,268 
பதிவானவை - 2,16,776
க.சொ.க.கண்ணன்(தி.மு.க.) - 99,255
க.பாலு(அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.) - 93,961
வாக்கு வித்தியாசம்- 5,294
பெரம்பலூர் தொகுதி(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 3,02,692
பதிவானவை - 2,40,481
பிரபாகரன்(தி.மு.க.) - 1,22,090
ரா.தமிழ்ச்செல்வன்(அ.தி.மு.க.) - 91,056
வாக்கு வித்தியாசம் - 31,034
குன்னம் தொகுதி(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள் - 2,73,461
பதிவானவை - 2,18,916
எஸ்.எஸ்.சிவசங்கர்(தி.மு.க.) - 1,03,992
ஆர்.டி.ராமச்சந்திரன்(அ.தி.மு.க.) - 97,593
வாக்கு வித்தியாசம் - 6,329

Next Story