மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்பு: கொடைக்கானலில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றதை கொடைக்கானலில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கொடைக்கானல்:
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக நேற்று காலை பதவியேற்றார். இதையடுத்து கொடைக்கானல் பஸ் நிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், அண்ணாநகர், நாயுடுபுரம், அப்சர்வேட்டரி உள்பட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு நகர தி.மு.க. செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான முகமது இப்ராகிம் தலைமை தாங்கி பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், நகர இலக்கிய அணி அமைப்பாளர் டார்லிங் அப்துல்லா, நகர பிரதிநிதி அஜ்மல்கான், தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த ஷேக்முஜிபூர்ரகுமான், முன்னாள் நகர துணைசெயலாளர் ராஜாராணி ராஜா, முன்னாள் நகரசபை துணை தலைவர்கள் தங்கராஜ், செல்லத்துரை, நகர நிர்வாகிகள் முகமது நயினார், ஆண்டவர் அப்பாஸ், நகர ம.தி.மு.க. செயலாளர் தாவூத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சின்னு, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மோகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story