பழங்களுக்குள் பதுக்கி கடத்திய வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல்


பழங்களுக்குள் பதுக்கி கடத்திய வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 May 2021 3:35 PM GMT (Updated: 28 May 2021 3:35 PM GMT)

வேட்டவலத்தில் பழங்களுக்குள் பதுக்கி கடத்திய வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேட்டவலம்

வேட்டவலத்தில் பழங்களுக்குள் பதுக்கி கடத்திய வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

வாகன தணிக்கை

வேட்டவலம் கடைவீதியில் பழைய போலீஸ் நிலையம் அருகே நேற்று  நள்ளிரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், தனிப்பிரிவு காவலர் சசிகுமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். 

சோதனையில் பழங்கள் அடங்கிய பெட்டிகள் இருந்தது. அந்த பெட்டிகளை சோதனை செய்தபோது அவற்றிற்குள் கர்நாடகா மாநில மதுபானம் 1,426 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

2 பேர் கைது

அதைத்தொடர்ந்து மதுபான பாக்கெட்டுகளுடன், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப் பதிவு செய்து மது பாக்கெட்டுகளை கடத்திவந்த வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த பழ வியாபாரி அண்ணாமலை (37), டிரைவர் குமார் (46) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு டிரைவர் அம்பேத்கர் (26) என்பவரை தேடிவருகின்றனர்.

Next Story