கியாஸ் சிலிண்டர் வெடித்து வாலிபர் உடல் கருகி சாவு திருமணமான 9 வது மாதத்தில் சோகம்


கியாஸ் சிலிண்டர் வெடித்து வாலிபர் உடல் கருகி சாவு திருமணமான 9 வது மாதத்தில் சோகம்
x
தினத்தந்தி 28 May 2021 5:35 PM GMT (Updated: 28 May 2021 5:35 PM GMT)

பகண்டைகூட்டுரோடு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வாலிபர் உடல் கருகி சாவு திருமணமான 9 வது மாதத்தில் சோகம்

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு அருகே இளையனார்குப்பம் ஏரி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன்(வயது 25). இவருடைய மனைவி சிவஜோதி (20). இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் மணிகண்டன் மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் வீட்டிற்குள் இருந்த மணிகண்டன் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story