பூதலூர் வட்டாரத்தில் 349 பேருக்கு கொரோனா பரிசோதனை


பூதலூர் வட்டாரத்தில் 349 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Jun 2021 1:55 AM IST (Updated: 6 Jun 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

349 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி:-
பூதலூர் அருகே அயோத்திப்பட்டி, தொண்டராயன்பாடி ஆகிய கிராமங்களில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் பாளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பரிசோதகர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அயோத்திப்பட்டி கிராமத்தில் 151 பேருக்கும், தொண்டராயன்பாடி கிராமத்தில் 198 பேருக்கும் என மொத்தம் 349 பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. முகாம்களை தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களில் அங்கன்வாடி பணியாளர்களின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்தார். பூதலூர் பகுதியில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story