மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1 லட்சத்தை நெருங்கியது


மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1 லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 6 Jun 2021 9:58 AM GMT (Updated: 6 Jun 2021 9:58 AM GMT)

மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1 லட்சத்தை நெருங்கி உள்ளது.

13,659 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று புதிதாக 13 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்து 19 ஆயிரத்து 224 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 55 லட்சத்து 28 ஆயிரத்து 834 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 21 ஆயிரத்து 776 பேர் குணமாகி வீடு திரும்பினர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 88 ஆயிரத்து 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 300 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 99 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பை நிலவரம்
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 866 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 29 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை நகரில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 511 நாட்களாக உள்ளது. தாராவியில் நேற்று மேலும் 3 பேருக்கு பாதிப்பு 
கண்டறியப்பட்டது. தற்போது அங்கு 22 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story