பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு


பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2021 7:37 PM GMT (Updated: 6 Jun 2021 7:37 PM GMT)

திசையன்விளை அருகே பஞ்சாயத்து பெண் ஊழியரிடம் மர்மநபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.

திசையன்விளை, ஜூன்:
திசையன்விளை அருகே உள்ள தரகன் காட்டை சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 32). திசையன்விளை பஞ்சாயத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் செல்வமருதூர் பவுண்டு தெரு அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பாலசரஸ்வதியிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த திசையன்விளை போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடிக்க முயற்சித்தனர். ஆனால் திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாலசரஸ்வதி திைசயன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள திருடர்களின் படங்களை வைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story