ஆளூர் பேரூராட்சியில் ஊழியர்கள் ‘திடீர்’ போராட்டம்


ஆளூர் பேரூராட்சியில் ஊழியர்கள் ‘திடீர்’ போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2021 6:04 PM GMT (Updated: 7 Jun 2021 6:04 PM GMT)

ஆளூர் பேரூராட்சியில் ஊழியர்கள் ‘திடீர்’ போராட்டம் நடத்தினர்.

திங்கள்சந்தை:
ஆளூர் பேரூராட்சியில் சரத், மணிகண்ட பிரபு ஆகியோர் தற்காலிக மின்நிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பேரூராட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் மீட்டர் ரீடிங் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு மின்நிலை உதவியாளராக பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரத் மற்றும் மணிகண்ட பிரபு ஆகியோர் எங்களுக்கு வர வேண்டிய பணியை ஏன் நீங்கள் தண்ணீர் மீட்டர் பணியாளருக்கு வழங்குனீர்கள் என்று செயல் அலுவலரிடம் முறையிட்டனர். அதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை எனத்தெரிகிறது. இதையடுத்து நேற்று காலை சரத் மற்றும் மணிகண்ட பிரபு ஆகியோர் தங்களுக்கு பணிநியமன ஆணை வழங்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்பு தான் போராட்டங்கள் நடத்த வேண்டும். இப்பொழுது ஊரடங்கு காலம் என்பதால் ேபாராட்டங்களுக்கு அனுமதி இல்லை. மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனைத்தொடர்ந்து இரண்டு பேரும் போராட்டத்தை கைவிட்டு விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story