மாவட்ட செய்திகள்

நன்னிலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை + "||" + Boom Boom Cattlemen Request Relief

நன்னிலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை

நன்னிலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
நன்னிலத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்,

கொேரானா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு 14-ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஏராளமான பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வருவார்கள். இவர்களில் ஆண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தை காட்டுவது. பெண்கள் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டிகயிறு போன்ற பொருட்களை ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் விற்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் மாடுகள் இல்லாமல் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் உள்ளனர்.

வாழ்வாதாரம் இன்றி தவிப்பு

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் வருமானம் இல்லாமல் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருடப்பட்ட சிலைகள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் பா.ஜ.க. கோரிக்கை
அர்ச்சகர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயம் திருடப்பட்ட சிலைகள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் பா.ஜ.க. கோரிக்கை.
2. சிறு-குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை
சிறு-குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை.
3. சிறு கடனாளிகள், தொழில் நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்த அவகாசம்: 12 முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மத்திய அரசை வலியுறுத்த கோரிக்கை
சிறு கடனாளிகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்த அவகாசம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த கோரி 12 முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
4. தனிப்பாதைகளை அதிகரித்து சென்னையில், சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
தனிப்பாதைகளை அதிகரித்து சென்னையில், சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.
5. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன், ஆசிரியர் தேர்வு வாரியத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.