வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளருடன், சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு


வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளருடன், சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 5:58 PM GMT (Updated: 12 Jun 2021 5:58 PM GMT)

வேலூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் வாசுவுடன், சசிகலா பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர்

முன்னாள் மாவட்ட செயலாளர்

தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், அகில உலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளருமான எல்.கே.எம்.பி.வாசுவிடம், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

சசிகலா:- வணக்கம் வாசு... நல்லா இருக்கீங்களா...
வாசு:- நல்லா இருக்கேம்மா... அம்மா எப்படி இருக்கீங்கம்மா... அம்மா குரலை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு
சசிகலா:- வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?
வாசு:- எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா
சசிகலா:- உங்க மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு
வாசு:- மாவட்டத்தில் இப்போது தான் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும்மா
சசிகலா:- சரி... சரி...

தலைமை ஏற்க வாங்க

வாசு:- நீங்க தான்மா வரனும் இப்ப... பேரறிஞர் அண்ணா வந்து நாவலரை தம்பி வா... தலைமை ஏற்க வா... என்று சொன்னாரோ.. அதேபோல இப்ப இருக்கிற காலக்கட்டத்துக்கு அம்மா வாங்க தலைமை ஏற்க வாங்க. மீண்டும் ஜெயலலிதா கண்ட ஆட்சியை கொண்டு வர முடியும்.

சசிகலா:- சரி... சரி... கட்டாயம் வருகிறேன்.
வாசு:- அ.தி.மு.க. கட்சி என்ன நிலைமையில இருக்கு என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துல தலைமைக்கு எல்லோரும் கட்டுப்பட்டு இருந்தாங்க. ஆனா இப்போ கட்சியில் கட்டுக்கோப்பு எதுவும் இல்லை. மந்திரி, மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் குறுநில மன்னர்கள் மாதிரி இருக்கிறார்கள். தொண்டர்களை மதிப்பதில்லை.
சசிகலா:- தொண்டர்கள் தான் முக்கியம் கட்சிக்கு...
வாசு:- தொண்டர்களுக்கு இப்போ சுத்தமா மரியாதை இல்லை. புரட்சி தலைவர், ஜெயலலிதா காலத்துல எல்லாரும் தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பாங்க...
சசிகலா:- அதுதானே நம்ம கட்சியோட வழக்கம்.
வாசு:- இப்ப என்ன ஆச்சுனா... எடப்பாடி காலத்துல அவரு வந்து மாவட்ட செயலாளர்கள், மந்திரிக்கு கட்டுப்பட்டு தலைகீழாக ஆகி போச்சு... ஒரு பயம் எதுவும் இல்லாமல் போச்சு.

விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்

சசிகலா:- நிச்சயம் வருவேன். தொண்டர்கள் குமுறல் தாங்க முடியவில்லை. கவலைப்படாதீங்க.. நான் விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்.
வாசு:- சட்டமன்ற தேர்தலில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சீட்டு தான் கிடைச்சது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுத்தமாக சீட் இல்லை.
சசிகலா:- ஆமா
வாசு:- இனிமே இந்த கட்சி நல்லபடியா இருக்கனும்னா... நீங்க வந்தா தான் நடக்கும். காலத்தின் கட்டாயம் அம்மா.
சசிகலா:- நிச்சயமா... இந்த கட்சியை அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன். கவலைப்படாதீங்க. தொண்டர்களையும் விட்டு விட மாட்டேன். நிச்சயம் நல்லபடியாக கொண்டு வந்து அம்மா செஞ்ச மாதிரி மக்களுக்கும் செஞ்சு நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்.
வாசு:- அம்மாவுக்கு சின்ன வேண்டுகோள் மட்டும்.... எந்த ஆட்சி வந்தாலும் மாவட்டத்தில் குரூப் உள்ளது.
சசிகலா:- அது வந்து குரூப் இருந்தா சரியா வராது. அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. அம்மா எப்படி கொண்டு போனாங்களோ அந்த மாதிரி கொண்டு வந்திரலாம்... ஒன்னும் கவலைப்படாதீங்க.
வாசு: ரொம்ப சந்தோஷம்மா... ஒரு சாதாரண தொண்டன் கிட்ட நீங்க பேசுனது சந்தோஷம்
சசிகலா:- கட்சியின் தொண்டர்கள் எல்லோரும் எனக்கு முக்கியம். அதனால தான் லெட்டர் போடும் அனைவரிடமும் பேசி வருகிறேன். சீக்கிரம் எல்லாரையும் சந்திக்கிறேன்.
இவ்வாறு அந்த உரையாடல் நடக்கிறது.

Next Story