எமரால்டு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


எமரால்டு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Jun 2021 4:57 PM GMT (Updated: 15 Jun 2021 4:57 PM GMT)

எமரால்டு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் நடந்து வருகிறது.

மஞ்சூர்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன்படி முள்ளிகூடர் ஊராட்சிக்கு உட்பட்ட எமரால்டு அண்ணாநகர், சத்யா நகர் பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இங்கு, ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா ராதாகிருஷ்ணன் அறிவுரையின்படி, களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என்று கணக்கெடுத்தனர். மேலும் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Next Story