திருச்சி மாவட்டத்தில் இருந்து மது கடத்தி வந்த 3 பேர் பிடிபட்டனர்-33 மதுபாட்டில்கள் பறிமுதல்


திருச்சி மாவட்டத்தில் இருந்து மது கடத்தி வந்த 3 பேர் பிடிபட்டனர்-33 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:37 PM GMT (Updated: 15 Jun 2021 6:37 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் இருந்து மோகனூருக்கு மது கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து, 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மோகனூர்:
மதுபாட்டில்கள் கடத்தல்
நாமக்கல், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. ஆனால் இதர 27 மாவட்டங்களிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்ததால் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
மேலும் அண்டை மாவட்டமான திருச்சியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நாமக்கல்லை சேர்ந்த மதுப்பிரியர்கள் அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3 பேர் கைது
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வடுகபட்டியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பரமத்திவேலூர் அருகே உள்ள கண்டப்பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்த பாலமணிகண்டன் (வயது 40), ஆரியூர் ஊராட்சி ஆமப்பாறையை சேர்ந்த ரமேஷ் (38), கரூர் மாவட்டம் நஞ்சைபுகளூர் தவிட்டுபாளையத்தை சேர்ந்த தனபாலன் (53) ஆகியோர் என்பதும், திருச்சியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பிராஜ் மற்றும் போலீசார் அவர்கள் 3 பேரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 19 பீர்பாட்டில்கள், 14 குவார்ட்டர் பாட்டில்கள் என மொத்தம் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story