நெல்லையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
நெல்லையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கருவிகளை வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுவரை 39 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்துவது குறித்த அவசியத்தை எடுத்துரைப்பதில் முன்னோடியாக திகழ்கிறது.
இந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதார தனியார் சுகாதார நிறுவனம் சார்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவர்களிடம் வழங்கினார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Related Tags :
Next Story