நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
x
தினத்தந்தி 6 July 2021 6:51 PM GMT (Updated: 6 July 2021 6:51 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வயது வந்தோர் மற்றும் காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் பகுதியில் முற்றுகையிட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தாக்குதல் சம்பவம்

அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி சுப்புராஜ் -மகேசுவரி. இவர்களை அந்த பகுதியை சேர்ந்த சிலர் சரமாரியாக தாக்கியதுடன், ஊரை காலி செய்யுமாறு கூறி மிரட்டுகின்றனர்.
இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகிறது. 

எனவே இவர்களுக்கு ஆபத்து வராமல் தடுக்க மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறிஉள்ளனர்.

Next Story