கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 8:23 PM GMT (Updated: 9 July 2021 8:23 PM GMT)

சிவகாசி பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி பகுதியில் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்களிடம் இருந்த வந்த புகாரை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் திருத்தங்கல் சத்யாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வெள்ளச்சாமி மகன் சுப்புராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் சிவகாசி-எரிச்சநத்தம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த ஜெயசங்கர் (27), வேல்முருகன் (24) ஆகியோர் 300 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story