நெல்லையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2021 8:42 PM GMT (Updated: 12 July 2021 8:42 PM GMT)

நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தொடர் படுகொலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் கலைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு, தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் வளவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story