மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்
x
தினத்தந்தி 16 July 2021 7:46 AM GMT (Updated: 16 July 2021 7:49 AM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

சென்னை,

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, மத்திய நீர்வளத்துறை மந்திரி இன்று பிற்பகல் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேச உள்ளனர்.

இந்நிலையில், மேகதாது அணைக்கு அனுமதி கேட்டு பிரதமரை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இன்று சந்திக்க உள்ள சூழலில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, முதல்-அமைச்சர்  வரும் 18-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரை சந்தித்து முதல்-அமைச்சர்  மேகதாது விவகாரம் தொடர்பாக வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

Next Story