சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்களுக்கு பாராட்டு; கமிஷனர் சான்றிதழ்களை வழங்கினார்
சென்னை மாநகராட்சி பகுதிகளில், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒரு வாரம் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் ஒரு வாரம் நடைபெற்ற தூய்மை பணியின்போது 2 ஆயிரம் டன் குப்பைகள் மற்றும் 6 ஆயிரத்து 700 டன் கட்டிடக்கழிவுகள் என மொத்தம் 8 ஆயிரத்து 700 டன் கழிவுகள் அகற்றப்பட்டன.இதில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் சிறப்பான வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு 113 டன் குப்பைகள் மற்றும் 519 டன் கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த தீவிர தூய்மைப்பணியை பாரட்டி மண்டல அலுவலர் எஸ்.வெங்கடேசன், என்ஜினீயர்கள் எம்.காமராஜ். எம்.விக்டர் ஞானராஜ், துப்புரவு கண்காணிப்பாளர் எ.ஹரி, துப்புரவு ஆய்வாளர் எச்.சரவணன் ஆகியோரை பாராட்டி மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி சான்றிதழ்களை வழங்கினார்.
வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தீவிர தூய்மை பணி மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story