மாவட்ட செய்திகள்

காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு + "||" + Corporation study on air pollution in collaboration with IIT Chennai

காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு

காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு
காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு அதிகாரி தகவல்.
சென்னை,

நாடு முழுவதும் காற்று மாசுபாட்டை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைப்பதற்கு தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தர மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. அதில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் அடங்கி உள்ளன. அதில் சென்னைக்கு ரூ.181 கோடியினை 15-வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்தது.


அந்தவகையில் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து காற்று மாசுபாடு குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி இடையே கடந்த மே மாதம் 6-ந்தேதி கையெழுத்தானது. இந்த திட்டத்தை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆலோசனையுடன் சென்னை ஐ.ஐ.டி செயல்படுத்தும். மேலும் அவ்வப்போது காற்றின் தர கண்காணிப்பு, தரபகுப்பாய்வு, தரவு பயன்பாடு, தொகுத்தல், அறிக்கை தயாரித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை ஐ.ஐ.டி அனுப்ப உள்ளது. சென்னையில் நடத்தப்படும் இந்த ஆய்வின் நோக்கம் சுற்றுப்புற காற்று மாசுபாட்டிற்கான மூல பங்களிப்பு மதிப்பீடு, மாசுக்கான மூலங்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதாகும். மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
2. பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
3. சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்
சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்.
4. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்
எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்.
5. நடைபாதைகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்ற மாநகராட்சி, பெஸ்காமுக்கு 3 மாதம் கெடு - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் நடைபாதைகளில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் பெஸ்காமுக்கு 3 மாத காலம் கெடு விதித்து கா்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.