தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு


தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 28 Sep 2021 10:54 AM GMT (Updated: 28 Sep 2021 10:54 AM GMT)

தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பேசினார். இதன் பின்னர் நிருபர்களிடம் சீமான் பேசியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பது சாதி, மதம், சாராயம், கவர்ச்சி, பணம் ஆகிய ஐந்து தூண்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விட அதிக அளவில் வருமானம் ஈட்டும் தொழிலாக உள்ளாட்சி பதவி உள்ளது

விவசாயக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி என்று கூறிவரும் இரு கட்சிகளையும் நாம் புறந்தள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே ஜி.எஸ்.டி. என கூறும் மத்திய அரசு, உள்ளாட்சி தேர்தலை கூட, ஒரே கட்டமாக நடத்த முடியாத நிலையில் உள்ளது.பறக்கும் படையினர் என ஒன்றை அமைத்து, சாலையில் செல்லும் அப்பாவி மக்களிடம் பணத்தைப் பறிக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் பண மழை பொழிந்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி போல் உள்ளது. ஆகவே, அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை சீர்திருத்த வேண்டிய சூழலில், முதல் கட்டத்தில் நாம் உள்ளோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Next Story