குளிா்சாதன வசதி அரசு பஸ்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்; சுததம் செய்து தயார்படுத்தினர்


குளிா்சாதன வசதி அரசு பஸ்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்; சுததம் செய்து தயார்படுத்தினர்
x
தினத்தந்தி 30 Sep 2021 6:35 PM GMT (Updated: 30 Sep 2021 6:35 PM GMT)

குளிா்சாதன வசதி கொண்ட அரசு பஸ்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதையொட்டி பஸ்களை ஊழியர்கள் சுததம் செய்து தயார்படுத்தினர்.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையொட்டி பஸ் போக்குவரத்துதும் நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்த பிறகு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகங்களின் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக பஸ்களில் உள்ள பேட்டரி திறன் மற்றும் குளிர்சாதன வசதி ஆகியவை குறித்து ஆய்வு செய்து தயார்படுத்தப்பட்டது. மேலும் பஸ் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஸ்சின் உள் பகுதியில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நெல்லை கோட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 30 குளிர்சாதன வசதி பஸ்கள் தயார் செய்யப்பட்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட பஸ்களும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இன்று முதல் இயக்கப்படுகிறது.

Next Story