நர்சிங் மாணவியிடம் செல்போன் திருட்டு; பெண் தூய்மை பணியாளர் கைது


நர்சிங் மாணவியிடம் செல்போன் திருட்டு; பெண் தூய்மை பணியாளர் கைது
x
தினத்தந்தி 30 Sep 2021 6:52 PM GMT (Updated: 30 Sep 2021 6:52 PM GMT)

நர்சிங் மாணவியிடம் செல்போன் திருடிய, பெண் தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் மோனிகா (வயது 19). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி விடுதியில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில் மோனிகா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போனை மேஜையில் வைத்திருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது செல்போனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிகா, இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோனிகாவின் செல்போனை திருடியது அதே ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வரும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தசெல்வி (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்த செல்வியை கைது செய்து, அவரிடம் இருந்து செல்போனை மீட்டனர்.

Next Story