சிறுமி கற்பழித்த 62 வயது முதியவருக்கு விதித்த தூக்கு தண்டனை ரத்து


சிறுமி கற்பழித்த 62 வயது முதியவருக்கு விதித்த தூக்கு தண்டனை ரத்து
x
தினத்தந்தி 30 Sep 2021 8:46 PM GMT (Updated: 30 Sep 2021 8:46 PM GMT)

கோலாரில் 15 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் 62 வயது முதியவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு: கோலாரில் 15 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் 62 வயது முதியவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

சிறுமி கற்பழிப்பு

கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி வசிக்கிறாள். அந்த சிறுமி கடந்த ஆண்டு (2020), அதே கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசப்பா என்பவரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சிறுமியை கற்பழித்ததாக வெங்கடேசப்பா (வயது 62) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கோலார் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமியை கற்பழித்த, முதியவர் வெங்கடேசப்பாவுக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறி இருந்தது.

தூக்கு தண்டனை ரத்து

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வெங்கடேசப்பா சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் நரேந்திரா மற்றும் அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

அப்போது 15 வயது சிறுமியை கற்பழிப்பு வழக்கில் வெங்கடேசப்பாவுக்கு கோலார் கோர்ட்டு விதித்திருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளனர்.

Next Story