சொத்து பிரச்சினையில் தம்பதியை தாக்கிய முதியவர் கைது


சொத்து பிரச்சினையில் தம்பதியை தாக்கிய முதியவர் கைது
x
தினத்தந்தி 30 Sep 2021 9:15 PM GMT (Updated: 30 Sep 2021 9:15 PM GMT)

சொத்து பிரச்சினையில் தம்பதியை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்க நல்லூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 44). இவருக்கும், இவருடைய சித்தப்பா கோவிந்தசாமி(60) என்பவருக்கும் சொத்துப் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் வீட்டு வாசலின் முன்பு கோவிந்தசாமி, அவருடைய மனைவி வசந்தி(52) ஆகியோர் சேர்ந்து சுரேசை திட்டி அருகில் இருந்த இரும்பு குழாயால் தாக்கியதாகவும், அதை தடுக்க வந்த சுரேசின் மனைவி சித்ராவை(42) அருகில் இருந்த கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் கோவிந்தசாமி, வசந்தி ஆகியோர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story