பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திடீர் தீ


பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திடீர் தீ
x
தினத்தந்தி 30 Sep 2021 9:15 PM GMT (Updated: 30 Sep 2021 9:15 PM GMT)

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் குழாய் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், நேற்று மதியம் பூமியில் புதைக்கப்பட்டுள்ள பெட்ரோல் தொட்டியில் லாரியில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல் நிரப்பப்பட்டது. அப்போது திடீரென அந்தக் குழாய் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் சிலர் விரைந்து செயல்பட்டு, தீயணைப்பான் கருவிகள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த காட்சி அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story