ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு


ஸ்ரீவைகுண்டத்தில்  பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2021 12:11 PM GMT (Updated: 1 Oct 2021 12:11 PM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தில் மாடு மேய்க்க சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி அருணாச்சல வடிவு (வயது 59). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று தடு்ப்பணை பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகே தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது எதிரே வந்த மர்ம நபர் திடீரென்று அருணாச்சல வடிவு முகத்தில் வெள்ளை நிற சாக்குப்பையை போட்டு மூடி கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க காசுகளுடன் கூடிய தாலி சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
அப்போது அருணாச்சல வடிவு கூச்சல் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று காயமடைந்த அருணாச்சல வடிவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அருணாச்சல வடிவு அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலையின் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story