திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 42 வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேற்று தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள விடுதிகள், அன்னதான மண்டபம், இடும்பன் கோவில் கந்த சஷ்டி விரத மண்டபம், நாழிக்கிணறு, பஸ் ஸ்டாண்டு வளாகம், நாழிக்கிணறு நடைபாதை, கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அவர் ஆய்வு செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள தேவையற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பயிற்சி கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், தாசில்தார் முருகேசன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, உதவி ஆணையர் செல்வராஜ், நெல்லை மண்டல நகர பஞ்சாயத்துக்களின் உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், திருச்செந்தூர் செயல் அலுவலர் இப்ராகிம், பொறியாளர் ஆவுடையப்பன், சுகாதார மேற்பார்வையாளர் வெற்றிவேல் முருகன், கோவில் உதவி செயற்பொறியாளர் முருகன், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் அர்ஜூன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-----------
Related Tags :
Next Story