பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு


பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 4:17 PM GMT (Updated: 1 Oct 2021 4:17 PM GMT)

பொங்கலூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.

பொங்கலூர
பொங்கலூர் அருகே பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.
தம்பதி
பொங்கலூர் அருகே உள்ள கண்டியங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துப்பாளையம், ஓடக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி . இவரது மனைவி சொர்ணாத்தாள் . இவர்கள் இருவரும் நேற்று காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள செம்மாண்டம் பாளையத்தில் தங்களது உறவின் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்றனர். 
பின்னர் இருவரும் மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மொபட்டை  பழனிசாமி ஓட்டினார். பின் இருக்கையில் சொர்ணாத்தாள் அமர்ந்து இருந்தார். அப்போது மாலை  5 மணி அளவில் அலகுமலை கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து ஒரு  மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்தனர்.
நகை பறிப்பு
அந்த ஆசாமிகள் திடீரென்று சொர்ணாத்தாள் கழுத்தில் கிடந்த தாலி கொடியை பிடித்து இழுத்தனர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது மர்ம நபர்கள் 7 பவுன் தாலிக்கொடி பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து பழனிசாமி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் பெண்ணிடம் தாலிக்கொடியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Next Story