பெரணமல்லூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பெரணமல்லூர் அருகே  பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Oct 2021 4:46 PM GMT (Updated: 1 Oct 2021 4:46 PM GMT)

பெரணமல்லூர் அருகே பழங்குயினருக்கு வீடுகட்ட இடம்கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே பழங்குயினருக்கு வீடுகட்ட இடம்கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வீடுகட்ட இடம் 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியில் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 6 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு வந்தவாசி தாசில்தாரிடம் மனு கொடுத்திருந்தனர். 

அதன்பேரில் பெரிய ஏரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு பழங்குடியின மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.

இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நேற்று வடுவன் குடிசை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டிக்கொள்ளுங்கள் என்று தாசில்தார் திருநாவுக்கரசு கூறியதாக தெரிகிறது.

எதிர்ப்பு தெரிவித்து மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வடுவன் குடிசை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யார் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், வந்தவாசி தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சென்று சாலை மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சென்று பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள இடம் குறித்து  மறுபரிசீலனை செய்யப்படும் என கூறினர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story