தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Oct 2021 6:56 PM GMT (Updated: 1 Oct 2021 6:56 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வால்வில் பழுது ஏற்பட்டு வீணாகும் குடிநீர் 
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட இனாம் கரூர், வெங்கமேடு கணக்கு பிள்ளை தெரு மற்றும்  8-வது வார்டு தெருக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழாயின் வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சரண்ராஜ், வெங்கமேடு, கரூர். 

இருளில் தவிக்கும் கிராம மக்கள் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமம் 3-வது வார்டு மூப்பனார் கோவில் தெருவில் கடந்த ஒரு மாதமாக  தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மின் விளக்கு இல்லாததால் அப்பகுதியில் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் தெருக்களில் சென்றுவர முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம், பெரம்பலூர். 

சேறும், சகதியுமாக மாறிய சாலை 
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் திருவாக்குடி ஊராட்சி வெள்ளாளவாயல் கிராமத்தில் 50-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, மழை பெய்யும்போது சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்துகாயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாக்கியராஜ், வெள்ளாளவாயல், புதுக்கோட்டை. 

விளம்பரம் செய்யும் இடமாக மாறிய நிழற்குடை 
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா லாலாபேட்டை பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற் குடை சுத்தம் செய்யப்படாமல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, விளம்பரம் செய்யும் இடம்போல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த நிழற்குடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராமச்சந்திரன், விஸ்வநாதபுரி, கரூர். 

நோயாளிகள் அவதி 
அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அறிவழகன், அரியலூர்.

பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? 
பெரம்பலூர்  மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சிறுவயலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் பாலம்  அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மாற்றுபாதையை சரியாக அமைக்காமல் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜசேகர், சிறுவயலூர், பெரம்பலூர். 

அதிகரிக்கும் நாய்களால் தூக்கத்தை இழந்த மக்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், அந்தோனியார்கோவில் தெரு, கரடிக்காடு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதனால் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நாய்கள் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வதுடன், இரவில் தூங்கும்போது குறைத்துக்கொண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் சரிவர தூங்க முடிவதில்லை. மேலும் அப்பகுதியில் இரவில் நடமாடவே மக்கள் மிகுந்த அச்சம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 சாலமன், இலுப்பூர், புதுக்கோட்டை.

சரிசெய்யப்படாத கழிப்பறையால் தவிக்கும் மாணவிகள் 
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள பெண்கள் கழிப்பறை கடந்த கஜா புயலின்போது கதவு உள்ளிட்டவை சேதம் அடைந்தது.  இவை இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளதால் மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மணிகண்டன், பரம்பூர், புதுக்கோட்டை. 

நிழற்குடை அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நெய்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளபாறையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் தினமும் அப்பகுதியில் உள்ள பஸ்  நிறுத்தத்திற்கு 1 கிலோ மீட்டர் நடந்து வந்தும், பயணியர் நிழற்குடை இல்லாததால்  வெயிலிலும், மழையிலும் நின்று தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு பஸ் மூலம் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சூர்யா, நெய்வேலி, திருச்சி. 


கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பம் 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி துவாக்குடி நகராட்சி 13வது வார்டு அக்பர் சாலை அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
மலைச்சாமி, துவாக்குடி, திருச்சி. 

சாலையை மறைக்கும் முட் செடிகள் 
திருச்சி முதலியார் சத்திரம் 26 வது வார்டில் குட்ஷெட்ரோடு ரயில்வே கேட் அருகே பாதையை மறைக்கும் அளவிற்கு முள் செடி வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரபாகரன், முதலியார் சத்திரம், திருச்சி.

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் 
திருச்சி மாவட்டம், உறையூர், டாக்டர் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை உறையூர் காசிவிளங்கி படித்துறையில் கொட்டுகின்றனர். இதனால் ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மணிகண்டன், உறையூர், திருச்சி. 

தொடரும் மின்வெட்டால் மாணவர்கள் அவதி 
திருச்சி மாவட்டம், திருவரங்கம் தாலுக்கா , கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள பூங்குடி கிராமத்தில் , தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது . இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின் கம்பங்களும் கடுமையாக பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வெற்றிச்செல்வன் ,  திருச்சி.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாநகராட்சி 59 வது வார்டு நாச்சியார் ரோடு பகுதியில்  வெக்காளி அம்மன் கோவில் செல்லும் சாலையின் ஓரத்தில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் சிறிய மழை பெய்தாலும் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும்  அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
ஆனந்தன், உறையூர், திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில்  நொச்சியம் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பைகளை நாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறுவதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழை பெய்யும்போது அப்பகுதியில் மழைநீர் தேங்கி அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 அல்லி,  நொச்சியம், திருச்சி.  

பயனற்ற கழிப்பறை 
திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு லாரி செட் பின்புறம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை அமைக்கப்பட்டது. இந்த கழிப்பறை தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கழிப்பறை பயனற்று இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி. 


Next Story