லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்; சார் பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்கு

நெல்லை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதிரடி சோதனை
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை டவுன் சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 மணி நேரம் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
9 பேர் மீது வழக்கு
இதுகுறித்து நெல்லை வட்ட வழங்கல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, நெல்லை சார்பதிவாளர் உமாபதி, சார்பதிவாளர் அலுவலக வீடியோ பதிவாளர் சண்முகநாதன், ஊழியர் ஜெயராணி, ஓய்வுபெற்ற எழுத்தர் குமார், பத்திர எழுத்தர் ஜெயா மற்றும் முத்துலட்சுமி, பெரியசாமி, முத்துக்குமாரசாமி, முத்துப்பாண்டியன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story