ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே போக்குவரத்து தலைமை அதிகாரி ஆய்வு


ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே போக்குவரத்து தலைமை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2021 8:29 PM GMT (Updated: 1 Oct 2021 8:29 PM GMT)

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே போக்குவரத்து தலைமை அதிகாரி ஆய்வு செய்தார்.

நெல்லை:
தென்னக ரெயில்வே போக்குவரத்து தலைமை செயல் மேலாளர் நீனு இட்டேரா சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் வந்தார்.
இவர் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை நடைமேடை, ரெயில் நிலையத்தில் நடைபெறும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் தண்டவாளங்களை ஆய்வு செய்தார்.
மேலும் சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை ரெயில் பாதை முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மதுரையில் இருந்து நெல்லைக்கு இரட்டை ரெயில் பாதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த இரட்டை ரெயில் பாதை பணியை விரைந்து முடித்து ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நெல்லையில் இருந்து இயக்கக்கூடிய பயணிகள் ரெயில்களான திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, மதுரை, நாகர்கோவில் ஆகிய பயணிகள் ரெயில்களை விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நெல்லை சந்திப்பில் ஆய்வு பணியை முடித்துவிட்டு விருதுநகர் துலுக்கர்பட்டி தனியார் சிமெண்டு ஆலையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி எந்திரத்தை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வு பணியின்போது நெல்லை ரெயில்வே மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story