பட்டாசு கடை அருகே தீ விபத்து


பட்டாசு கடை அருகே தீ விபத்து
x
தினத்தந்தி 1 Oct 2021 8:43 PM GMT (Updated: 1 Oct 2021 8:43 PM GMT)

சிவகாசியில் பட்டாசு கடை அருகே தீவிபத்து ஏற்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி ராமசாமிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை சிவகாமிபுரம் காலனியில் உள்ளது. இந்த கடையை சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (35) என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். கடையின் அருகே தகர செட் அமைத்து கிப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடிக்க தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பட்டாசு மற்றும் தகர செட் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று கூறப்படுகிறது. 

Related Tags :
Next Story