ஆலங்குளத்தில் 193 அரிவாள்கள் பறிமுதல்


ஆலங்குளத்தில் 193 அரிவாள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Oct 2021 8:59 PM GMT (Updated: 1 Oct 2021 8:59 PM GMT)

ஆலங்குளத்தில் 193 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆலங்குளம்:
நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆலங்குளத்தில் தென்காசி-நெல்லை சாலையில் உள்ள அரிவாள்கள் விற்பனை செய்யும் கடைகளில் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது அங்கு பாதுகாப்பற்ற முறையில் இருந்த 193 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரிகளிடம் தேர்தல் முடியும் வரை இதுபோன்ற ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், ஆயுதங்கள் வாங்க வருபவர்களிடம் ஆதார் அட்டை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட அரிவாள்கள் தேர்தல் முடிந்த பிறகு வியாபாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story