சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்; கத்தியுடன் 2 பேர் சிக்கினர்


சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்; கத்தியுடன் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 2 Oct 2021 3:58 AM GMT (Updated: 2 Oct 2021 3:58 AM GMT)

சென்னையில் பள்ளி - கல்லூரிகள் செயல்பட தொடங்கியதும் மாணவர்களின் மோதலும் ஆங்காங்கே தொடங்கிவிட்டது.

நேற்று மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் இரண்டு குழுவாக கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் போலீஸ் படையினர் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் தப்பியோடிவிட்டனர். போலீசார் கல்லூரி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி, கேண்டீனில் பதுங்கியிருந்த 2 மாணவர்களை பிடித்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story