தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 7 பேர் மீது வழக்கு


தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:27 AM GMT (Updated: 2 Oct 2021 8:27 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் பல்வேறு பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது புகைப்படம், சின்னத்துடன் கூடிய சுவரொட்டிகளை வண்டலூர், ஓட்டேரி, மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளில் ஒட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக 7 பேர் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story