கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் பணி மும்முரம்


கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 2 Oct 2021 4:14 PM GMT (Updated: 2 Oct 2021 4:14 PM GMT)

பொள்ளாச்சி வட்டார பகுதியில் கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெகமம்

பொள்ளாச்சி வட்டார பகுதியில் கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 


கொப்பரை உற்பத்தி

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நெகமம் அருகே செட்டிபுதூர் (கோப்பனூர்புதூர்) கிராமம் கப்பளாங்கரை ஊராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரிசி முறுக்கு, தட்டவடை, அதிரசம், இனிப்பு பனியாரம், செய்வது தான் பிரதான தொழிலாக இருந்தது. மேலும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காய் மூலம் கொப்பரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறு விவசாயிகளிடம் கொப்பரையை கிலோ கணக்கில் விலைக்கு வாங்கி இருப்பு வைத்து அதை தரம் பிரித்து காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் கேரளாவிற்கு எண்ணெய் தயாரிக்க விற்பனை செய்து வருகிறார்கள். 

பணிகள் மும்முரம்

தற்போது நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி வட்டார பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் தேங்காயை கொப்பரை தேங்காயாக உற்பத்தி செய்வதில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால் செட்டிபுதூர் கிராமத்தில் கொப்பரை தொழில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தற்போது தினசரி லாரிகள் மட்டும் 50-க்கும் மேற்பட்டவை வந்து போவதால் கூலி தொழிலாளர்களுக்கும், பெண்கள், ஆண்களுக்கு தினசரி வேலை கிடைத்து வருகிறது.அது மட்டுமல்லாமல் இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை கிடைத்து வருகிறது. 

Next Story