வடவள்ளியில் கள்ளக்காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து


வடவள்ளியில் கள்ளக்காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 2 Oct 2021 4:53 PM GMT (Updated: 2 Oct 2021 4:53 PM GMT)

வடவள்ளியில் கள்ளக்காதலியின் அண்ணனுக்கு கத்திக்குத்து

வடவள்ளி

கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ராஜ கோபால் (வயது34). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

 பின்னர் அது கள்ளக்காத லாக மாறியது. இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் ராஜகோபா லை கண்டித்தனர்.  ஆனால் அவர் அதை கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் அண்ணன் ஜான்மகேந்திரன் (35) ராஜகோபாலை கண்டித்துள்ளார்.

 இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அது முன்விரோதமாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கள்ளக்காதலியை சந்திக்க ராஜகோபால் அவரது வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த பெண்ணின் அண்ணன் ஜான்மகேந்திரன், ராஜகோபாலை கண்டித்து தடுத்து நிறுத்தினார். 

இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான்மகேந்திரனை சரமாரியாக குத்தினார். இதில் படு காயம் அடைந்து அலறித்துடித்த அவரை மீட்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்து ராஜகோபால் தப்பி ஓடி விட்டார்.  

காயம் அடைந்த  ஜான்மகேந்திரன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ராஜகோபால் மீது வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story